தமிழகம்

தாக்குதல் அச்சம்: சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் சென்னை, மதுரை வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானவுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும், சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மை, உருவப்படங்களி எரித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டின் மீதும், மதுரையில் உள்ள அவரது வீட்டின் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT