தமிழகம்

பேசும் படங்கள்: கொலு பொம்மைகள் கண்காட்சி

எல்.சீனிவாசன்

பூம்புகார் என்று புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்கர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு  கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் கொலு பொம்மைகள் கண்காட்சியினை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கடத்த ஆண்டுகளைப் போன்றே கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை 19. 09.18 முதல் 20.10.18 வரை நடத்தப்பட உள்ளது. தினசரி இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும்.

SCROLL FOR NEXT