தமிழகம்

டாஸ்மாக் கடையில் வைத்து 40 பவுன் தங்க கட்டியை திருடியவர் சிக்கினார்: 3 மணி நேரத்தில் போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை சவுகார்பேட்டை நன்னி யன் தெருவைச் சேர்ந்தவர் கமல். நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் 40 பவுன் தங்க கட்டியை ஒரு பையில் வைத்தபடி தனது நண்பர் ஹேமந்த் என்பவருடன் கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினார். பின்னர் வீட்டுக்கு திரும்பியவர் 40 பவுன் தங்க கட்டியைக் காணாமல் அதிர்ந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் நடத்திய வாகன சோதனையில், கமல் கூறிய அடையாளங்களுடன் ஒருவர் வந்தார். அவரை சோதனை செய்தபோது இடுப்பில் 40 பவுன் தங்க கட்டியை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில் அவரது பெயர் கர்ணன் என்பதும், கொண்டித் தோப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து தங்கக் கட்டியையும் பறிமுதல் செய்தனர். 3 மணி நேரத்தில் கொள்ளையனை போலீ ஸார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சம்பவம்: வளசர வாக்கத்தில் கோபிநாத் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்ற நிலையில் அவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT