தமிழகம்

சுவடியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் படிப்பில் ஓராண்டு கால பட்டயப் படிப்பு வழங்கப்படுகிறது. ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களைப் படிக்கவும், படியெடுக்கவும் பதிப்பித்து நூலாக வெளியிடவும் இப்படிப்பில் பயிற்சி அளிக்கப்படும்.

இதில், தமிழ் பட்டதாரிகள், பி.லிட். முடித்தவர்கள் மட்டுமின்றி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் முதல் பகுதியில் தமிழை பாடமாக எடுத்துப் படித்தவர்களும் சேரலாம். வயது 40-க்குள் இருக்க வேண்டும். பயிற்சிக் கட்டணம் ரூ.2 ஆயிரம்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான (2014-2015) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.ulakaththamizh.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அக்டோபர் மாதம் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வகுப்புகள் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்று உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT