தமிழகம்

பேசும் படம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களால் மறைக்கப்படும் சாலைகள்; அவதிப்படும் பாதசாரிகள்

எல்.சீனிவாசன்

அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக பொருட் செலவில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் ஞயிற்றுக்கிழமை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களின் முக்கிய சாலைகளில் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல இடங்களில் பாதசாரிகள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் பல இடங்களில் பேருந்து நிலையங்களை மறைத்து பேனர்கள் கட்டப்பட்டுள்ளதால் பார்வையற்ற பாதசாரிகள் உரிய இடத்துக்குச் செல்ல முடியாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT