பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பிய வாழ்த்து கடிதம் பேஸ் புக்கில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் பெறுநர் முகவரியில் தவறுதலாக திரு.சந்திரசேகர் ராவ் (நரேந்திர மோடி என குறிப்பிடுவதற்கு பதிலாக), இந்திய பிரதமர், எண்.7, ரேஸ் கோர்ஸ் ரோடு, புது டெல்லி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் பேஸ்புக்கில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக தரப்பில் கேட்ட போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கடிதம் அனுப்புவதற்கு முன்பு, அந்த கடிதம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது. கடிதத்தில் பெறுநர் முகவரியில் பெயர் மாறி இருப்பதாக தெரியவந்தது. அதன்பின் திருத்தம் செய்யப்பட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டது.
திருத்தம் செய்யப்பட்ட வாழ்த்து கடிதம் மீண்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நரேந்திர மோடிக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், பெறுநர் முகவரியில் அவருடைய பெயர்தான் உள்ளது என்றனர்.