தமிழகம்

‘இந்து தமிழ் திசை’ நடத்தும் பொறியியல் படிப்புக்கான ‘ஆன்லைன் கவுன்சலிங்’வழிகாட்டுதல் நிகழ்ச்சி: நெல்லையில் வரும் 29-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ எனும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மேற்படிப்புக்கான வழிகாட்டு நிகழ்ச்சி, நெல்லை வண்ணாரப்பேட்டையிலுள்ள ஹோட்டல் அஃப்னா பார்க் அரங்கில் வரும் சனிக்கிழமை (ஜூன் - 29) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். பொறியியலில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும், தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை, விருப்பமான பாடப்பிரிவை ஆன்லைனில் எவ்வாறு தேர்வு செய்ய  வேண்டும் என்ற கேள்விகளுக்கும்  சந்தேகங்களுக்குமான  பதில்களை நேரடியாக கேட்டுப் பெறும் நோக்கிலும் நடைபெறும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சியில், கல்வியாளர் டாக்டர் கே.மாறன், TNEA ஆன்லைன் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கங்களை அளிக்க DOTE அதிகாரி டாக்டர் பி.லதா ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு தங்கள் வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டும் நிகழ்வு.

தவறாது வாருங்கள்... பயன்பெறுங்கள்..!

பதிவு செய்ய: http://bit.ly/31LdhS6

SCROLL FOR NEXT