உலகில் பல நாடுகள் மரபு சாரா எரிசக்திக்கு மாறிவரும் நிலையில் அதேபோல் இந்தியாவும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாமல் மின்சாரம் தயாரிக்க புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் இன்றைய மின் தேவை 16,050 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. சுமார், இரண்டரை கோடி மின் இணைப்புகள் உள்ளன. அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், அணுமின் நிலையம் ஆகிய வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் வளம் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இவற்றை பெரும் அளவில் பூமியில் இருந்து எடுப்பதால் நில அதிர்வு உருவாகக் காரணமாகிறது. நீர்மின் நிலைய உற்பத்தியும் அணைகளில் அதிக அளவில் நீர் தேங்கியுள்ள காலங்களில் மட்டுமே நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மண்டலத் தலைவர் சசாங்கன் கூறியதாவது: அணுமின் உற்பத்திச் செலவு குறைவு என்ற கருத்து இருந்தாலும், இந்த முறை மிகவும் ஆபத்தானதாகும். இதற்கு ரஷ்யா, ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிவிபத்துகளே சிறந்த உதாரணம். அந்த இடங்களில் இன்றளவும் உயிரினங்கள் வசிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
அதனால், உலக நாடுகள் தற்போது மரபு சாரா எரிசக்திக்கு மாறிவருகின்றன. அதேபோல் இந்தியாவும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாமல் மின்சாரம் தயாரிக்க புதிய வழி முறைகளைக் கையாள வேண்டும். சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை மற் றும் தேசிய நீர்வழிச் சாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். ரஷ்யா போன்ற சில நாடுகளில் கட லலைகள் மூலம் மின்சாரம் உற் பத்தி செய்கின்றனர்.
தமிழகத்தில் கிழக்கு பகுதியில் நீளமான கடற்கரை உள்ளதால், ஆண்டு முழுவதும் கடல் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும்.
நீர்வழிச்சாலை
சீனா போன்ற நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் வறட்சி, வெள்ளம், ஆகியவற்றை சமா ளிப்பதோடு, 1800 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையங்களை நிறுவி ஆண்டு முழுவதும் 150 கோடி யூனிட் மின்சாரத்தை தடையின்றி உற்பத்தி செய்யலாம். தமிழகத்தின் அனைத்து ஆறுகளுக்கும் உபரி நீரை வழங்கலாம். கடலில் கலக்கும் காவிரி நீரை நீர்வழிச் சாலையில் சேமிக்கலாம். அனைத்து ஆறு களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
நீர் வழிச் சாலையில் படகுப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்துச் செலவு குறையும். பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு குறையும். இதனால் காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு வெகுவாக குறையும். பூமியின் இயற்கை வளங்கள் தீர்ந்து போகாமல் தடுக்கலாம். குடிநீ ருக்கும் விவசாயத்துக்கும் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைப்பதால் வேலைவாய்ப்பு பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.