தமிழகம்

ஹாட்லீக்ஸ் : 598-ல் அமமுக ஜீரோ!

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 31 மக்களவைத் தொகுதிகளில் 598 வாக்கு இயந்திரங்களில் அமமுகவுக்கு ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை என்று  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இன்னும்  பல  இடங்களில் ஒன்று, இரண்டு என்ற  எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவில் அமமுகவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறதாம். 

குறிப்பாக,  பதிவு  மதுரை மாவட்டம் மேலூரில் தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்து மறைந்த முன்னாள் எம்எல்ஏ-வான சாமியின் வீடு இருக்கும் தெருவில் அமமுகவுக்கு விழுந்த ஓட்டுகள் இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லையாம்.

அங்கு மட்டுமே இருநூறு ஓட்டுகளுக்கு மேல் பதிவாகி இருக்க வேண்டுமாம்.

இதனால் அதிர்ந்து கிடக்கும் தினகரன் முகாம், எஞ்சிய 7 தொகுதிகளிலும் ஆய்வைத் தொடர்கிறது. அனைத்து  முடிவுகளும் முழுமையாகக் கிடைத்த  பிறகு  நீதிமன்றத்தை  நாடப்போகிறார்களாம்.

SCROLL FOR NEXT