சென்னை பார்க் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல்லை வைத்து மின்சார ரயிலை கவிழ்க்க சில விஷமிகள் முயற்சி செய்துள்ளதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோட்டை, பார்க் ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில் சென்று கொண்டிருந்த போது சற்று தொலைவில் தண்டவாளத்தில் கல் ஒன்று கிடந்ததை ஓட்டுநர் கண்டார். இதனையடுத்து உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட அங்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த கல்லை அகற்றினர். இதனைத் தொடர்ந்து தண்டவாளத்தில் கல்லை வைத்த நபர்கள் குறித்த விசாரணையை எழும்பூர் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.