நிபா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:
தொற்றும் நோய்களுக்கான உயர் சிகிச்சைகள் ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்கள் இங்கு பூரணமாக குணப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 7 அறைகள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.