தமிழகம்

ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத நிலையில் விதிகளை மீறி பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்கள்

செய்திப்பிரிவு

மதுரையில் விதியை மீறி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு செல்கின்றனர். இவர்கள் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள் திறக்கப்பட்டன. சில தனியார் பள்ளி கள் தவிர்த்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் நாளை (ஜூன் 6) திறக்கப்படு கின்றன. பள்ளிகள் திறக்கப்படுவற்கு முன் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித் துறை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில் மாணவர்கள் செல்போன், ஸ்மார்ட் போன்களை பள்ளிக்குக் கொண்டுவரக்கூடாது, பைக் மற்றும் மோட்டார் சைக்கிளில் வரக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் விதியை மீறி பைக்கில் பள்ளிக்கு வந்தனர்.

மேலும், மாணவர்கள் அசுர வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இல்லாத நிலையில் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை விதியை மீறி ஓட்டிக் கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும், இது போன்ற விதி மீறல்களுக்கு பெற்றோரும் துணை போகக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT