தமிழகம்

சென்னை எஸ்.ஐ.இ.டி வளாகத்தில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சௌத் இன்டியன் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் ஜஸ்டிஸ் பஷீர் அகமது மகளிர் கல்லூரி வளாகத்தில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று (01.06.19) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஐ டி சி ஆர் லயோலா இயக்குனர் டாக்டர் மரிய அருள் ராஜா,  ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சுவாமி சுரஜித்தானந்தா, ஸ்ரீவிஷ்ணு மோகன் பவுண்டேஷனைச் சேர்ந்த சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், அஞ்சுமன் ஹிமாயத் ஏ இஸ்லாம் அமைப்பை சார்ந்த ஹபீப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மும்மதங்களின் இறைவணக்க பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ் ஐ டிரஸ்ட் செயலாளர் பைசூர் ரஹ்மான் தொடக்க உரை ஆற்றினார்.

அவரை தொடர்ந்து அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஹபீப் உசேன், பாதிரியார் மரிய அருள் ராஜா, சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், சுவாமி சுரஜித்தானந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

இப்தார் நேரம் வந்ததும் இஸ்லாமிய பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

பின்னர் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய சூழலில் இந்த இப்தார் நிகழ்ச்சி மதநல்லிணக்கத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது.

SCROLL FOR NEXT