தமிழகம்

மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

டுவின்டெக் அகாடமியின் வணிக மேலாண்மை தீர்வு மையம் மற்றும் ஆர்எம்டி சுகாதாரப் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பினை சென்னை டுவின்டெக் அகாடமி தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தப் படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றும் இளநிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்கொண்டு 10 வார  இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை) அமைத்து வகுப்புகளாக வழங்குகிறது.

கம்யூனிகேஷன் திறன், சுகாதார சேவையில் மனித வள மேலாண்மை, மருத்துவமனைகளுக்கான தர அங்கீகார முறைகள், தொடர் விநியோக மேலாண்மை எனப்படும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பு வசதிகள், சுகாதார பாதுகாப்பு சட்டங்கள், ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் க்ளெய்ம் மேனேஜ்மென்ட், முழுத்தர நிர்வாகம், பயிற்சி மற்றும் வளர்ச்சி தேவைகள், நிதி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை விஜயம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமைந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் இளநிலை மற்றும் மத்திய நிலை அலுவலர்களின் திறமையை குறிப்பாக நிர்வாக சிக்கல்கள் மற்றும் மேலாண்மை கருத்துகளைப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களது தலைமைப் பண்புகளையும், குழுமனப்பாங்கினையும் ஏற்படுத்தி மேம்படுத்தவும் தயார்படுத்துகிறது.

இந்தப் படிப்பின் மற்றுமொரு முக்கிய நோக்கம், மருத்துவமனைகளின் வளமான நிகழ்கால அனுபவங்களிடமிருந்து பெறப்பட்ட மற்றும் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட மேலாண்மை உத்திகளை அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் மேற்பார்வையில், தனிநபர்களை சிறந்த திறமைமிக்க சிறப்பாகச் செயல்படக்கூடிய  மேற்பார்வை மற்றும் நிர்வாக அதிகாரிகளை உருவாக்குவதே ஆகும்.

டுவின்டெக் அகாதடமியின் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பின் வகுப்புகள் 13/07/2019 (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. தி.நகர் ராகவையா சாலையில் உள்ள ஆர்எமடி சுகாதாரப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்பத்தை  நிரப்பி சமர்ப்பிக்க கடைசி நாள் : 25.06.2019

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பப்பிக்க கவனிக்கவேண்டிய வலைத்தளம்: www.chennaitwintech.com

மேலும் விவரங்களுக்கு; அ. மகாலிங்கம், டுவின்டெக் அகாடமி, தொலைபேசி எண்: (0) 97104 85295 / 98405 23560 இ-மெயில்: mahali@mahali.in

          
SCROLL FOR NEXT