தமிழகம்

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கியவர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

திருச்சியில் மாற்றுத் திறன் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக பணியாளரான செவித்திறன் பரிசோதகர் செல்லம் என்பவரை திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.

செவித்திறன் பரிசோதகர் செல்லம் கைது செய்யப்பட்டது குறித்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் மணிவாசகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து செல்லம் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT