தமிழகம்

ஒபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் 12-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

செய்திப்பிரிவு

அதிமுக எம்.பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 12-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேற்று பரபரப்பு பேட்டியளித்தார். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும், அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை,ஆளுமை திறனுடைய தலைவர் வேண்டும் எனக் கூறினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சென்னையில் வருகிற 12-ம் தேதி அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்,  மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத்  இடைத்தேர்தல் முடிவுகள், உட்கட்சி விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT