தமிழகம்

எழும்பூர் மருத்துவமனையில் ஊழியரிடம் நகைகள் திருட்டு: குழந்தையுடன் வந்த பெண் கைவரிசை

செய்திப்பிரிவு

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அலுவலக பெண் ஊழியராக இருப்பவர் வெண்ணிலா (53). நேற்று காலை 11.30 மணிக்கு மருத்துவமனை வளாகத்துக்கு கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்தார்.

நேராக வெண்ணிலா இருந்த அறைக்கு சென்ற அந்த பெண், “உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க என்னிடம் பணம் இல்லை. எனவே என்னிடம் உள்ள நகைகளை வாங்கிக்கொண்டு எனது குழந்தைக்கு சிகிச்சை அளியுங்கள்” என்று கூறி நகைகள் இருந்த ஒரு துணிப்பையை வெண்ணிலாவிடம் கொடுத்தாராம்.

துணிப்பையை திறந்து பார்த்த வெண்ணிலா சில விநாடிகளில் மயக்கம் அடைந்து விட்டார். சிறிது நேரம் கடந்த பின்னர் கண் விழித்துப் பார்த்த வெண்ணிலா, தான் அணிந்திருந்த செயின், வளையல்கள், கம்மல்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணின் படம், மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்மூலம் அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT