கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளை யத்தில் புகழூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் நேற்று நடை பெற்றது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
ஒரு வட்டத்தை உருவாக்க 30 வருவாய் கிராமங்கள் வேண்டும். ஆனால், கோடந்தூர், ஆரியூர், நடந்தை ஆகிய 3 கிராம மக்கள் அரவக்குறிச்சி வட்டத்தில் தொடர விரும்பியதால், அவற்றை தவிர்த் துவிட்டு, விதிகளை தளர்த்தி 27 வருவாய் கிராமங்களுடன் 1.06 லட்சம் மக்கள்தொகையுடன் புகழூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள், புகழூர் வருவதற்கு வசதியாக அரவக்குறிச்சியிலிருந்து சின்னதாராபுரம், நொய்யல், புகழூர் வழியாக வேலூருக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது என்றார். விழாவில் வருமானம், இருப் பிடம், சாதி, முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள், விலை யில்லா வீட்டுமனை ஆகியவற்றை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராய புரம் எம்எல்ஏ ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்ய பிரகாஷ், கோட்டாட்சியர் கு.சரவண மூர்த்தி, புகழூர் வட்டாட்சியர் ம.ராஜசேகரன், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர் களிடம் கூறியபோது, “இந்த ஆட்சி தொடர இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் இரட்டை இலைக்கு மக்கள் வாக்களித் துள்ளனர். சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத் தில் வெற்றி வாய்ப்பை இழந் துள்ளோம். இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு, 2021 தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட் சியை அமைப்போம்” என்றார்.