தமிழகம்

அமைச்சர் வேலுமணி எந்த உலகத்தில் எந்த தண்ணீர் பற்றி பேசுகிறார்: ஜெ.அன்பழகன் கிண்டல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி. எதிர்க்கட்சிகள் வீண் பயத்தை ஏற்படுத்தவேண்டாம் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி கூறியதற்கு இவர் எந்த உலகத்தில் இருக்கிறார், எந்த தண்ணீர் பற்றி பேசுகிறார் என ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

சென்னையில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குடிநீர் கட்டமைப்புகளுக்குத் தகுந்தவாறு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளால், குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, வீண் வதந்திகளைப் பரப்பக்கூடாது'' என்றார்.

ஆனால், தமிழகம் முழுவதும் குடிக்கத் தண்ணீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் விளக்கம் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சரின் கருத்து குறித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்துள்ளோம்.

முழுவதும் தண்ணீருக்காக மக்கள் ஆங்காங்கே தவிக்கும் நிலையில், மாநில அமைச்சர் வேலுமணி, “தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” எனக் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.

அமைச்சர் எந்த லோகத்தில் எந்த தண்ணீரைப் பற்றி பேசுகிறார் என்பது தான் புரியவில்லை”

இவ்வாறு ஜெ.அன்பழகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT