தோட்டத்தில் எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த எலிமருந்தை உட்கொண்ட 2 மயில்கள் பலியாயின.
மேட்டூர் அருகே உள்ள விருதாசம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது தோட்டத்தில் கோகோ மரங்களை வளர்த்துவருகிறார். கோகோ மரங்களை எலி, கோழி உள்ளிட்டவை நாசம் செய்து வந்துள்ளன. இதனால், தோட்டத் தில் எலிமருந்து வைத்துள்ளார். இதுகுறித்து அருகில் வசிப்பவர் களிடம் தெரிவித்த அவர், கோழி களை மேய விடவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கடும் வறட்சி காரணமாக காட்டுப் பகுதியில் சுற்றி திரியும் மயில் கூட்டம் இரை தேடி கிராமப்புற பகுதிகளில் இரவில் சுற்றிவந்துள்ளது. மணி யின் தோட்டத்துக்குள் புகுந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மயில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தை சாப்பிட்டதால், மயங்கி விழுந்துள்ளன. அருகில் உள்ள வர்கள் மயில்களைக் காப்பாற்ற முயற்சித்தும் பலனின்றி இரண்டு மயில்களும் பரிதாபமாக உயிரி ழந்தன.
வனவாசி வனத்துறை அதிகாரி களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் விரைந்து வந்து இறந்த மயில்களைக் கைப் பற்றி, கால்நடை மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவர்கள் அறிக்கை அளித்த பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காலம் என்பதால், காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுத்திட, அவைகளுக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகளை அளிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.