வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே பரவாக வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வழக்கத்தைவிட நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், லேசாக தூரல் மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.