தமிழகம்

அதிமுகவுடன் மோதலால் பரபரப்பு: கோவை பாஜக மேயர் வேட்பாளர் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

கோவையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதலில் பாஜக மேயர் தேர்தல் வேட்பாளர் நந்தகுமார் நேற்று தாக்கப்பட்டார். பாஜக, அதிமுக நிர்வாகிகளின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

கோவை சவுரிபாளையம் மாரியம்மன் கோயில் பகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தில், போடிநாயக்கனூரைச் சேர்ந்த அதிமுக-வினர் தங்கியிருந்தனர். தேர்தல் நாளான்று வெளியூரைச் சேர்ந்த கட்சியினர் தேர்தல் பகுதி யிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாஜக-வினர் அங்கே திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், பாஜக வேட்பாளரை அதிமுக-வினர் அடித்து, உதைத்ததாகவும் அதனைத் தடுக்க முயன்றவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது. பாஜக பிரமுகர் தாமுவின் கார் பின்புறக் கண்ணாடி உடைக்கப்பட்டதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுக, சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் சின்னசாமி தலைமையிலானோரும், பாஜக மேயர் வேட்பாளர் நந்தகுமார் தலைமையிலானோருக்கும் தொடர்ந்து தகராறு நீடித்தது. அப்போது, கோவை அதிமுக மாவட்ட பிரதிநிதி ஜெயகோபாலின் முன்பக்க கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

இது தொடர்பாக பாஜக மண்டல இளைஞர் அணி பொது செயலா ளர் கார்த்திக் என்பவரை அதிமுக- வினர் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனை, அங்கிருந்த பாஜக-வின ரும், போலீஸாரும் தடுத்தபோது, இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் கார்த் திக்கை கைது செய்து, இரு தரப் பினரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மோதலைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீ ஸார் சம்பவ இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே, தன்னை காயப்படுத்திய அதிமுக-வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மேயர் வேட்பாளர், பீளமேடு காவல் நிலையத்தில் மனு அளித்தார். இதேபோல், தனது கார் கண்ணாடியை உடைத்த அதிமுக-வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாவட்ட துணை தலைவர் தாமு, புகார் மனு அளித்தார். இரு மனுக்கள் மீதும் வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள படி, போடிநாயக்கனூர் பகுதி ஊராட்சி தலைவர், அவரது ஆதரவாளர்கள், சவுரிபாளையம் பகுதி அதிமுக நிர்வாகிகள் சிலரின் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதேபோல், தனது கார் கண் ணாடியை உடைத்த பாஜக-வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பீளமேடு காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் புகார் மனு அளித்தார். இதன்பேரில் பாஜக-வைச் சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT