தமிழகம்

தமிழ்நாடு ஐபிஎஸ்- ஐஆர்எஸ் அதிகாரிகள் சிபிஐக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் எஸ்பி உள்ளிட்ட 3 ஐபிஎஸ் மற்றும் 1 ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஆகியோர் மத்திய அயல் பணிக்காக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிபிஐயில் எஸ்பியாக பணியாற்ற தமிழக கேடர் ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் 4 பேரை அயல்பணிக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவர்கள் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இப்பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறைச் செயலர் திரிபாதி வெளியிட்டுள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் விபரம் வருமாறு:

காஞ்சிபுரம் எஸ்பியாக பதவி வகிக்கும் சந்தோஷ் ஹதிமானி (2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பதவி வகிக்கும் முரளி ரம்பா(2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி)

சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையராக பதவி வகிக்கும் சோனல்.வி.மிஷ்ரா (2008 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி)

2008 பேட்ச் தமிழக ஐ.ஆர்.எஸ் அதிகாரியான வித்யூத் விகாஷ்

ஆகிய 4 பேர் அயல்பணிக்கு செல்கின்றனர்.

SCROLL FOR NEXT