செட்டிநாடு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ.எம்.ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. முத்தையாவின் நடவடிக்கைகளுக் குப் பின்னால் அவரைப் பெற்ற தந்தையான சேக்கப்பச் செட்டியார் இருப்பதால், அவரை மதுரை தமிழ் இசைச் சங்கப் பதவியில் இருந்து நீக்க எம்.ஏ.எம்.ராமசாமி தரப்பினர் முடிவெடுத்திருப்பது குறித்து `தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது.
அதன்படி, நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தமிழ் இசைச் சங்கத்தின் பொதுக்குழு கூடியது. கூட்டம் தொடர்பான அஜெண்டாவில் முன்பு கையெழுத் திட்டிருந்த ஆர்.சேக்கப்பச் செட்டி யார் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சேக்கப்பச் செட்டியாரின் பதவி 26.9.14ம் தேதியுடன் நிறைவடைகிறது. வழக்கமாக இந்தப் பதவியினுடைய காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், பதவி நீட்டிப்பு செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்குவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதே போல சேக்கப்பச் செட்டி யாரின் மகனும், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் வளர்ப்பு மகனுமான முத்தையா அறங்காவலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர்களுக்குப் பதில் டாக்டர் கிருஷ்ணன், காரைக்குடி நாகப்பன் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே செயலராக இருக் கும் ஏ.ஆர்.ராமசுவாமி, அறங்கா வலர்களாக இருக்கும் மோகன்காந்தி, ஜி.டி.கோபால், ஆர்.பட்டாபிராமன், பெரி.சொக்க லிங்கம், டாக்டர் ஆர்.ராமநாதன், ராம.வெள்ளையப்பன், எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன், டாக்டர் கே.சீனிவாசன், ராம.சோமசுந்தரம், டாக்டர் டி.ராஜகோபால் ஆகியோரின் பதவியின் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டது. நீக்கப்பட்ட ஆர்.சேக்கப்பச் செட்டியாரின் பணியைத் தொடர்வதற்காக ராம.சோமசுந்தரம் என்பவர், தமிழ் இசைச் சங்கப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
நீக்கப்பட்ட சேக்கப்பச் செட்டி யார் வரவு செலவு கணக்குகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், சங்க வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்தது, செக் பவர் போன்ற வையும் சேக்கப்பச் செட்டியாரிடம் இருந்து பறிக்கப்பட்டு, புதிய பொரு ளாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொருளாளருடன் சேர்ந்து தலை வர் அல்லது செயலாளரும் கையெழுத்திடுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.
நிறைவில் நன்றி தெரிவித்துப் பேசிய பொருளாளர் சோமசுந்தரம், அரசக் குடும்பத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற் காக நன்றி. எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் நம்பிக்கையையும், என் குடும்பத்தின் மரியாதையையும் கட்டிக் காப்பேன் என்றார்.