தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு, இந்திய அளவில் வழக்கம் போல பெய்யும் என்றும், தென்னிந்திய பகுதி களில் வழக்கத்தைவிட 9 சதவீதம் குறைவாகவே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
பருவமழை தொடங்கியது
இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அந்த மானில் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது. இது வழக்கமாக கேரளாவை வந்தடைய சுமார் 1-லிருந்து 2 வாரங்கள் எடுத்துக் கொள்ளும்.
இந்த ஆண்டு கூடுதலாக 7 நாட்கள் எடுத்துக்கொண்டு 21-வது நாளில் கேரளாவை வந்தடைந்துள்ளது. அதன் காரண மாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 7 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு பருவக்காற்று அரபிக் கடலில் வலுவடைந்திருப் பதாலும், தெற்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக் கடல் பகுதிகளில் மேகங்கள் அதிகரித்திருப்பதாலும், தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப் படுகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவக்கூடும்.
இடியுடன் மழை
தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ கத்தில் 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செமீ, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, மதுரை திருமங்கலத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்த வரையில், திருவள்ளூர், காஞ்சி புரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, திரு நெல்வேலி ஆகிய மாவட்டங் களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 7 டிகிரி வரை உயரக்கூடும். சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை குறைய ஒரு வாரம் ஆகும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் தெரிவித்தார்.