தமிழகம்

மின் கட்டண உயர்வு இப்போது வேண்டாம்: தொழில் துறை கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடப்பு நிதியாண் டில் மின் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.6,805 கோடி அளவுக்கு உயர்த்த தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட் டுள்ளது. இதுதொடர்பாக வரும் அக்டோபர் 23-ம் தேதிக்குள் பொது மக்கள், மின் பயன்பாட்டாளர்கள் தங்களது கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் எழுத்து மூலமாகவோ, கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வாயிலாகவோ தெரிவிக்கலாம் எனக் கூறப்பட் டுள்ளது.

இதேபோல, தமிழகம் முழு வதும் தொழில் துறையினருக்கு 20 சதவீத மின் பயன்பாடு கட்டுப்பாடும், மாலை நேரங்களில் 90 சதவீதக் கட்டுப்பாடும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் தொழில் துறை அமைப்புகளான கோவை இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், தென்னிந்திய நூற் பாலைகள் சங்கம் (சைமா), இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ), கோவை குறுந்தொழில்கள் சங்கம் (கொடிசியா), தென்னிந்திய இன்ஜி னீயரிங் உற்பத்தி சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்நாடு மின் பயன் பாட்டாளர்கள் சங்கமான ‘டீகா’ (TECA) சார்பில் தமிழக அரசு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக மின் வாரியம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மின் துறையை சீர்படுத்துவதி லும், அதிக மின்சார உற்பத்திக்கும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், திடீரென மின் கட்டுப்பாட்டை அமல் படுத்தினால் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். தொழில்கள் நசியும் ஆபத்துடன், உற்பத்தி குறைந்து தொழிலாளர் களுக்கு சம்பளம் வழங்குவதிலும் பிரச்சினை ஏற்படும். எனவே, மின் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்து, தேவையான மின்சாரம் வழங்க வேண்டும்.

மேலும், மின் கட்டண உயர்வு உத்தேசப் பட்டியலில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு குறைந்தது ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயர்த்த திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், தொழில் துறையினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும். எனவே உத்தேச மின் கட்டண உயர்வை அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு தள்ளி வைக்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம், மின் கட்டுப்பாடு குறித்து தொழில் துறையினர் இன்று கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர்.

SCROLL FOR NEXT