சிவகங்கை அருகே பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பு இன்றி, பெரியாறு பாசனக் கால்வாயை சேதப்படுத்தி 40 கி.மீ.க்கு சிலாப் கற்களை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர்.
பெரியாறு-வைகை பாசன விரிவாக்க கால்வாய்த் திட்டம் மூலம் மதுரை மாவட்டம், மேலுார் அருகே திருவாதவூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் தமறாக்கி, குமாரப்பட்டி, அரச னுார், நல்லாகுளம், மாத்துார் வரையும், தமறாக்கியில் இருந்து வி.மலம்பட்டி, கூட்டுறவுப்பட்டி, உசிலம்பட்டி, இடையமேலுார், ஈசனுார், காஞ்சிரங்கால், சிவகங்கை டி.புதுார், சூரக்குளம், செங்குளம், செம்பனுார், அதப்படக்கி வழி யாக மறவமங்கலம் வரையும் கால்வாய்கள் கட்டப்பட்டன.
மேலூர் அருகே காஞ்சிரம்பட்டி விலக்கில் இருந்து சிங்கம்புணரி, திருப்பத்தூருக்கும் கால்வாய்கள் கட்டப்பட்டன. பெரியாறு- வைகை அணைகள் மொத்த கொள் ளளவை எட்டும் பட்சத்தில், இக்கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 11,600 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன.
சிவகங்கை அருகே மறவமங்கலம் செல்லும் கால்வாயை சேதப் படுத்தி மர்மநபர்கள் கற்களை கடத்தி உள்ளனர். இதேபோல, பல இடங்களில் கற்கள் இல்லாமல் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டன. தண்ணீர் திறந்துவிட்டாலும் கடை மடை வரை செல்வது சிரமம்.
இதுகுறித்து விவசாயி சந் திரன் கூறியதாவது: மதுரை மாவட்ட பொதுப்பணி அதி காரிகள் கட்டுப்பாட்டில் இருப் பதால், கால்வாய்களை கண்டு கொள்வதில்லை. இதனால் கால்வாயை சேதப்படுத்தி கற் களை கடத்துகின்றனர். பல இடங்களில் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. சிலர் கால்வாய்களை ஆக்கிரமித்துள் ளனர். கற்களை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். கால்வாய்களைச் சீரமைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கால்வாயை தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். அந்தந்த கிராம மக்களே கற்களை எடுத் துச் சென்று விடுகின்றனர். அடையாளம் தெரியாததால் புகார் கொடுக்க முடியவில்லை என்றார்.