சென்னை எழும்பூரில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இருவரை ரயில்வே காவலர் காப்பாற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உழவன் விரைவு ரயிலில் ஏறுவதற்காக ஒரு சிறுமி மற்றும் அவரது தந்தை வந்துள்ளனர். ஆனால் ரயில் புறப்பட்டதால் பதற்றத்தில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று இருவரும் ஏற முயற்சித்தனர்.
ஆனால் ஏற முடியவில்லை இருவரும் தவறி விழுந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த ரயில்வே காவலர் ஜோஸ் அவர்களைக் காப்பாற்றினார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து காவலர் ஜோஸின் சமயசோதிமான உதவி தற்போது அவருக்கு பல பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது.