சென்னை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. சுங்கவரியை குறைத்தால், தங்கக் கடத்தல் குறையும் என மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையம் வழி யாக வெளிநாடுகளில் இருந்து தங் கம் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண் டில் ரூ.13 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினரும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரும் பறிமுதல் செய்தனர். இந்த ஆண்டில் கடந்த 8 மாதத்தில் மட்டும் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் விமான நிலை யத்தில் பிடிபட்டதை விட பல கோடி மதிப்புள்ள தங்கம், அதிகாரி களுக்கு தெரியாமல் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய வரு வாய் புலனாய்வுத்துறை அதிகாரி கள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து, மத்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தங்கம் கடத்தி வந்தவரை கைது செய்கிறோம். ஆனால், கைது செய்யப்பட்ட நபர் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார். தங்கக் கடத்தல் அதிகமாக நடத்தப்பதற்கு சுங்கவரிதான் முக்கிய காரணமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மதிப்பில் 10 சதவீதத்தை சுங்கவரியாக செலுத்த வேண்டியுள்ளது. அதனால் முறையாக தங்கத்தை கொண்டுவந்தால் மிகக்குறைந்த அளவே லாபம் கிடைக்கும். அதனால்தான் சுங்கவரி செலுத்தா மல், திருட்டுத் தனமான பலரும் தங்கத்தை கடத்தி வருகிறார்கள். சுங்கவரியை குறைத்தால், தங்கக் கடத்தல் குறைந்துவிடும். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வருபவர்கள் முறையாக சுங்கவரியை செலுத்துவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.