பாஜக செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி. நட்டாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ஜே.பி. நட்டா பாஜகவின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் அவரது நீண்ட அனுபவமும், ஈடுபாடும் சென்ற முறை ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் ஹிமாச்சல பிரதேச மாநில அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
அவரது இந்த அனுபவம் உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜகவின் வளர்ச்சிக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கும். கட்சித் தலைவர் அமித் ஷா வழிகாட்டுதலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலும் கட்சியை மேலும் மேலும் பலப்படுத்த உறுதுணையாக இருக்கும். தமிழக பாஜக சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.