தமிழகம்

கரகாட்ட மோகனாவிடம் பறிமுதல் செய்த ரூ.4 கோடி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் வீட்டில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கரகாட்ட கலைஞர் மோகனாம்பாள் வீட்டில் கடந்த மே மாதம் போலீஸார் நடத்திய ரெய்டில், ரூ.4 கோடியே 17 லட்சம் ரொக்கப் பணம், 73 பவுன் நகை மற்றும் வீட்டு அடமான பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் செம்மர கடத்தல் சம்பவங்களில் சம்பாதித்தது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், செம்மர கடத்தல் புள்ளிகளான மோகனாம்பாளின் உறவினர் சரவணன், திமுக ஒன்றிய செயலாளர் பாபு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் காட்பாடி நீதிபதி சுஜாதா முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி உத்தரவின் பேரில் பணம் காட்பாடி இந்தியன் வங்கியில் செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT