தமிழகம்

தேவையற்ற விமர்சனங்கள் தமிழக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாகாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

செய்திப்பிரிவு

குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் ஆனால் எதிர்க்கட்சிகள் எதையும் செய்யாததைப்போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரைப் பெற்றுத் தராது. ஆகவே ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் தேவை, அவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த போது எடுத்த மாற்று நடவடிக்கைகளைக் காட்டிலும் இன்றைய ஆட்சியில் நல்ல முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

3 மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ நாங்கள் எதுவுமே செய்யாதது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம், இன்னும் என்ன தேவை என்பதை அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து எடுத்துச் சொல்லலாம். அதை விடுத்து இது போன்ற விமர்சனங்கள் மக்களுக்கான தீர்வாகாது.  போர்க்கால அடிப்படையில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை மக்கள் அறிவார்கள்.

இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT