தமிழகம்

ஹிந்தியை திணிக்கக்கூடாது: மும்மொழிக்கொள்கை குறித்து கமல் பேட்டி

செய்திப்பிரிவு

மத்திய அரசின் மும்மொழிக்கொள்கை பரிந்துரை குறித்த கேள்விக்கு எதையும் திணிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என கமல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த் பேட்டி :

ஹிந்தி திணிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன?

நான் இந்தி படத்தில் நடித்தவன்,  இந்தியாவில் அவரவர் மொழியை மதிக்கும் கருத்துடன் சந்தோசமாக வாழ்கின்றனர்.

எதையும் திணிக்க கூடாது என்பது என்னுடைய கருத்து, விருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

முக்கியமாக தமிழர்கள் தம் மொழியை விட்டு விட்டு இன்னொரு மொழியை இனி ஏற்றுக்கொள்வது என்பது கஷ்டமாக உள்ளது, திணிக்கக் கூடாது என்பதுதான் வேண்டுகோள். இதற்கு முன்பும் அழுத்தி சொல்லியுள்ளோம்

ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பரவலான பேச்சு உள்ளதே?

நான் கற்றுக் கொண்டுதான் வேலைக்கு போனேன் ஆனால் வேலையே கிடைக்காது என்பதுதான் இப்போது நிலை.

அரவக்குறிச்சி பிரச்சினை முடிவா, ஆரம்பமா?

எப்படி இருந்தாலும் நேர்மையா சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம்.

ஓட்டு மெஷினில் போட்ட ஓட்டுகள் காணாமல் போய்விட்டதாக சொல்கிறார்களே?

அந்த மாதிரி ஒட்டுமொத்தமாக சொல்லிவிடமுடியாது. பிழைகள் நேர்ந்திருக்கலாம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய கடமை.

தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறதே?

அது எல்லோருக்கும் இருக்கிறது, அச்சமாக இருக்க வேண்டியதில்லை சந்தேகமாக மட்டும் இருந்தால் போதுமானது.

மோடியின் வருங்கால ஐந்தாண்டு ஆட்சி எப்படி இருக்கும்?

நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான ஆசை.

என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT