தமிழகம்

மதுரையிலிருந்து 15 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்

செய்திப்பிரிவு

மதுரையில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானம் 15 மணி நேரம் தாமதமாக இன்று மதியம் புறப்பட்டுச் சென்றது.

மதுரையில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூருக்கு ஏர்-இந்தியா விமானம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இந்த விமானத்தில் புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்னதாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், விமானம் புறப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு சற்றுமுன் 163 பயணிகளுடன் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட்டது. பயணிகள் அதுவரை தங்க மாற்று ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தன.

இருந்தாலும் 15 மணி நேர தாமதம் மிகவும் அதிகம் என பயணிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT