தமிழகம்

ஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்!

செய்திப்பிரிவு

கருணாநிதியின் பிறந்தநாள் அன்று காலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைகள் ஸ்டாலினைச் சந்தித்து கை குலுக்கினார்கள்.

ஆனால், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனும் அவரது ஆதரவாளர்களும் அறிவாலயம் போகவில்லை.

அதற்குப் பதிலாக சத்தியமூர்த்தி பவனிலேயே கருணாநிதி படத்தை வைத்து மாலை போட்டு பிறந்த நாளுக்கு மரியாதை செய்தார் கராத்தே.

 “காங்கிரஸ் அலுவலகத்தில் எப்படி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடலாம்?” என சிலர் சர்ச்சை எழுப்பியதற்கு, “எம்ஜிஆர் பிறந்த நாளை திருநாவுக்கரசர் கொண்டாடலையா?” என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்தாராம் கராத்தே!

SCROLL FOR NEXT