தமிழகம்

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது: மக்களவையில் திருமாவளவன் பேச்சு

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக காவிரியில் தண்ணிர் திறந்துவிட மறுப்பதாக மக்களவையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பேசியதாவது:

”தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது” எனக் கூறினார்.

இதற்கு கர்நாடக எம்.பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அவையில் அமளி நிலவியது.

சபாநாயகர் ஓம் பிர்லா கர்நாடக எம்.பி.க்களை அமைதியாக இருக்கக் கூறியும் அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

மேலும்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT