வேலூர் மாவட்டம் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனியார் கல்லூரியில் முதுநிலை கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், 28-ம் தேதி காலை கல்லூரிக்குச் சென்ற வசந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை நாட்றம்பள்ளி போலீஸில் அளித்துள்ள புகாரில், தனது மகளை சொக்கநாயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி (20) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் கலவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சனிக்கிழமை காலை கல்லூரிக்கு சென்ற மைதிலி, வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கல்லூரிக்கு சென்று விசாரித்ததில், அன்று மைதிலி கல்லூரிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் வாழைப்பந்தல் போலீஸில் புகார் செய்தார். அதில் தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.
போலீஸார் விசாரித்து வருகின்றனர்.