சென்னையில் ஹோட்டலின் 10-வது மாடியில் இருந்து குதித்து இன்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (23). புனேயில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். சொந்த ஊருக்கு செல்வதற்காக இரு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு 10 வது மாடிக்கு சென்றவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தகவலறிந்து சென்ற தேனாம்பேட்டை போலீஸார், உடலை கைப்பற்றினர். அப்போது நடத்திய சோதனையில், பரமேஸ்வரனின் சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதத்தில் 'எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை' என்று எழுதப்பட்டிருந்தது.