தமிழகம்

புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை: மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தகவல்

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்படும் அனைத்து வாக் காளர்களுக்கும் வண்ண வாக் காளர் அடையாள அட்டை வழங் கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர் களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய்) டி.ஜி.வினய், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) எஸ்.செந்தாமரை ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண் டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர் களிடம் விக்ரம் கபூர் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பிவிசி-யில் தயாரிக்கப்பட்ட வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக பிரின்ட்டோகிராபி என்ற நிறுவனத்தை அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள 1,36,099 வாக்காளர்களுக்கு பிவிசியினால் ஆன புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகள் அந்தந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் இனி புதி தாக பெயர் சேர்த்துக்கொள்ளும் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.

ஏற்கெனவே வாக்காளர் அடை யாள அட்டை வழங்கப்பட்ட வாக் காளர்களுக்கு வண்ண அட்டை வழங்கப்படாது. அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர் களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணமான ரூ.25 வசூலித்து வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.

SCROLL FOR NEXT