திருச்சியில் புதன்கிழமை காரில் வந்தவர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கொண்டு வந்த ரூ.50 லட்சம் பணத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்ற தாக கூறப்பட்ட சம்பவத்தில் 4 மணி நேரத்தில் துப்புதுலக்கியுள்ளனர் திருச்சி போலீஸார்.
திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் நகரைச் சேர்ந்த மர அறுவை மில் தொழிலதிபர் விஜேஷ் பட்டேல்(34). இவரது உறவினர் ஒருவர் தர வேண்டிய ரூ.50 லட்சம் பணத்தை இவரிடம் பணியாற்றிவரும் டேவிட்(27), கார் ஓட்டுநர் சிவசுப்பிரமணி(34) ஆகியோரை அனுப்பி வாங்கி வருமாறு கூறியுள்ளார் விஜேஷ். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு வந்தபோது, மதியம் 2.35 மணி யளவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பாலாஜி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மடக்கி தங்களின் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி ரூ.50 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர்.
திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் இந்த சம்பவம் குறித்து பணத்தை காரில் எடுத்து வந்த இருவரிடமும் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முர ணாகத் தகவல் அளித்தனர்.
இதனால் போலீஸார் சம்பவம் நடந்த இடத்திலும், 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப் போது சிவசுப்பிரமணி, அவரது மைத்துனர் கருப்பையா மற்றும் மர அறுவை மில் பணியாளர் டேவிட் ஆகியோர் சேர்ந்து திட்ட மிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு, அதை மறைக்க 2 பேர் மிளகாய்ப் பொடி தூவி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது.
பணப் புழக்கம் அதிகம் உள்ள விஜேஷ் குடும்பத்தினரிடம் இருந்து பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடவேண்டும் என டேவிட்டும், சிவசுப்பிரமணியும் திட்டமிட்டு வந்துள்ளனர். அதற் கேற்ற சூழ்நிலைக்காக காத்திருந்த போதுதான், புதன்கிழமை ரூ.50 லட்சத்தை தென்னூரில் இருந்து வாங்கிவருமாறு விஜேஷ் கூறி யுள்ளார். இதில் சுறுசுறுப்படைந்த இவர்கள் சிவசுப்பிரமணியின் மைத் துனர் கருப்பையாவின் உதவியை நாடினர். அவருக்கு போனில் தகவல் தெரிவித்து மிளகாய்ப் பொடியுடன் அரியமங்கலம் அருகே வரச் சொல்லியிருக் கின்றனர்.
அங்கு வந்த கருப்பையா, டேவிட்டுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று மலைக் கோயில் அருகே புதரில் பணத்தை மறைத்து வைத்துவிட்டு வந்து காரில் ஏறிக்கொண்டுள்ளார். பிறகு சிறிது தூரம் காரில் சென்ற 2 பேரும் காட்டூர் பாலாஜி நகர் அருகே காரை நிறுத்திவிட்டு மிளகாய்ப் பொடியை தங்கள் மீது தூவிக்கொண்டு, தங்கள் நிறுவன உரிமையாளருக்கு போன் செய்து ரூ.50 லட்சத்தையும் கொள்ளை யடித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருவெறும்பூர் வ.உ.சி. தெரு வைச் சேர்ந்த கருப்பையாவை கைதுசெய்து அவர் மலைக் கோயில் அருகே மறைத்து வைத்திருந்த ரூ.50 லட்சத்தையும் கைப்பற்றினர்.
இதற்காக அமைக்கப்பட்ட 4 தனிப்படையினர் கொள்ளை நிகழ்ந்த 4 மணி நேரத்தில் துப்பு துலக்கியதைப் பாராட்டி 15 பேருக்கு மத்திய மண்டல ஐஜி ராமசுப்பிரமணி வெகுமதி வழங்கி கவுரவித்தார்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட 3 பேரையும் போலீஸார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறை யிலடைத்தனர்.