தமிழகம்

உலக அமைதிக்காக 7 ஆயிரம் பேர் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை: வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது

செய்திப்பிரிவு

உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் 7 ஆயிரம் பேர் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

உலகில் அமைதி நிலவவும், மழை வேண்டியும், சென்னை மக்கள் நலமுடன் வாழவும், ஆண்கள், விதவைகள் உட்பட 7 ஆயிரம் பேர் பங்கேற்ற மகா திருவிளக்கு பூஜை சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த குத்து விளக்கு பூஜையை திருச்சியை தலைமை யிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்திய சுத்த சன்மார்க்க சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

காலை 9 மணியளவில் தொடங்கிய குத்து விளக்கு பூஜை யின் போது பெண்கள் மழை வேண்டி பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர்.

பூஜையின்போது வேத விற்ப ன்னர்கள் வேத மந்திரங்களை ஓத ஏராளமான பொதுமக்களும் வழிபட்டு சென்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 15 ஆயிரம் பேருக்கு மதிய நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அகத்தியர் சுத்த சன்மார்க்க சங்க நிர்வாகி கைலாசம் கூறுகையில், “ திருச்சி மாவட்டம் துறையூரை மையமாக கொண்டு இயங்கி வரும் எங்கள் ஆன்மீக மையம் அப்பகுதியில், கடந்த 1976-ம் ஆண்டு முதலே ஏராளமான நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் முதல் முறையாக கடந்தாண்டு 3000 பேர் பங்கேற்ற குத்து விளக்கு பூஜையை நடத்தினோம். இந்தாண்டு இரண்டாவது முறையாக 7000 பேர் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையை நடத்தி யுள்ளோம். இதில் கன்னிப்பெண்கள், திருமணமான வர்கள் மட்டுமன்றி ஆண்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.

SCROLL FOR NEXT