தமிழகம்

ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் அக்.13 வரை சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

ஆவின் பாலில் கலப்படம் செய் தது தொடர்பாக சென்னையை சேர்ந்த வைத்தியநாதனை சிபிசிஐடி போலீஸார் கைது செய் தனர். கடலூர் சிறையில் அடைக் கப்பட்டிருந்த அவரை 6 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தினர்.

விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் வைத்திய நாதனை நேற்று விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத் தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அவரை வருகிற 13-ம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி குமார் சரவணன் உத்தர விட்டார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 25-ம் தேதி வைத்தியநாதன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி குமாரசரவணன் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி விசாரணையை வருகிற அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT