தமிழகம்

செம்மரக் கட்டைகள் கடத்தல்: வனத்துறை அதிகாரி கைது

செய்திப்பிரிவு

பூண்டியை அடுத்த ஒதப்பை யில் உள்ள விவசாய நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை, மர்ம கும்பல் ஒன்று தோண்டி எடுத்து கடத்துவதாக வன அலுவலர் களுக்கு திங்கள்கிழமை காலை புகார் வந்தது.

இதையடுத்து, வன அலுவலர் மதன்குமார் தலைமையில் வனத் துறையினர் அங்கு சென்றனர். அவர்களைக் கண்டதும் மர்ம கும்பல் செம்மரக் கட்டைகளைப் போட்டுவிட்டு தப்பி ஓடியது.

இதையடுத்து, நிலத்தின் உரிமையாளரைப் பிடித்து விசாரித்தபோது, கும்மிடிப்பூண்டி வனச் சரகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வுபெற்ற செல்வராஜ் என்பவர் செம்மரக் கட்டைகளை அங்கு புதைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து புதைத்து வைக்கப் பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT