தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு கண்காட்சி: சென்னையில் நாளை நடக்கிறது

செய்திப்பிரிவு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள சிடிஐ வளாகத்தில் (பஸ் நிலையம் அருகில்) நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சி மறுவாழ்வு மையம் (விஆர்சி), தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மேம்பாட்டுக்கழகம், செஷைர் ஹோம்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்து கின்றன.

இதில், 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பிஇ, பிடெக், எம்டெக் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஊனமுற்ற நபர்கள், காது கேளாதோர் மட்டும் பங்கேற்கலாம். பொறியியல் பிரிவில் (பிஇ, பிடெக், எம்டெக்) காது கேளாதோர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

கண்காட்சிக்கு வருவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது விஆர்சி மைய அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றி தழ்கள், தன்விவர குறிப்பு (பயோடேட்டா) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். கண்காட்சியின்போது, வேலை வாய்ப்பு ஆலோசனை, தொழில் பயிற்சி வாய்ப்புகள், சுயதொழில், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்படும்.

இந்த தகவலை விஆர்சி துணை இயக்குநர் (மறுவாழ்வு) ஜி.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT