சேலம் அருகே பாலியல் புகார் தொடர்பாக ஜோதிடர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த ஆர்.தொப்பூரைச் சேர்ந்தவர் ஜோதிடர் பன்னீர்செல்வம்(46). இவரிடம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த தம்பதி, தங்களது மகளுக்கு திருமணம் தள்ளிப்போவதாகக் கூறி வந்துள்ளனர். அவர் சிறப்பு பூஜை செய்வதாக கூறி, தனி அறையில் பெண்ணை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் தாரமங்கலம் போலீஸில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வத்தை போலீஸார் ரகசியமாக காண்காணித்து வந்தனர். அப்போது, ஜோதிடம் பார்க்க வந்த ஒரு பெண்ணை பன்னீர்செல்வம் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். போலீஸார் திடீரென அறைக்குள் சென்றபோது, பன்னீர்செல்வம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.