தமிழகம்

மீஞ்சூர் அருகே புள்ளிமான் குட்டி பிடிபட்டது

செய்திப்பிரிவு

மீஞ்சூர் அருகே வழிதவறி வந்த புள்ளிமான் குட்டி பிடிபட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள கொரஞ்சூர் ரெட்டிப் பாளையம் கிராமத்தில் உள்ள முட்புதருக்குள் புள்ளிமான் குட்டி ஒன்று துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட, அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீ ஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று, புள்ளிமான் குட்டியை மீட்டு, காவல் நிலையத் துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் மான் குட்டியை பெற்றுக் கொண்டனர். இந்த மான் குட்டி பிறந்து பத்து நாள்கள்தான் ஆகிறது. காட்டுப் பள்ளி பகுதியில் உள்ள எண்ணூர் துறைமுக காடுகளில் இறை தேடும் போது, வழி தவறி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரி வித்தனர். பிடிபட்ட மான்குட்டியை வனத்துறையினர் மீண்டும் வனப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT