காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கண்டிப்பாக தொடர்வோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு எதிராக இரண்டு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலில், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பது. அடுத்தது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
பிரதமருக்கு கடிதம் எழுதினோம், நேரில் வலியுறுத்தினோம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்துள்ளோம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வோம் இதில் புதுச்சேரி அரசு பின்வாங்காது" என்றார்.
தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு குறித்த கேள்விக்கு கூட்டணி கட்சிகளை ஆலோசித்து முடிவு செய்வோம் என நாராயணசாமி கூறினார்.