தமிழகம்

திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்: நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு

கி.மகாராஜன்

திருச்சி திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில், கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்து விசாரிக்கவும், அவசர மனுவாக விசாரிக்கவும் கோரி வழக்கறிஞர் நீலமேகம், டிராபிக் பாத்திமா உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடு செய்தனர்.

அதனை மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறுவுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் நேற்று (மார்ச் 7ஆம் தேதி) மாலை இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர், காமராஜ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ராஜா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சமீப காலங்களில், சோதனை எனும் பெயரில் காவல்துறையினர் ஆங்காங்கே வாகனங்களை, நிறுத்தி  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, இதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் நீலமேகம் என்பவரும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென டிராபிக் பாத்திமாவும் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பாக முறையிட்டனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி அதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT