காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம் பேடுவை அடுத்த இல்லீடு கிராமப் பகுதியில் உள்ள தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு களப்பயிற்சி தரும் வகையிலும், விவசாய பணிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் ஒருநாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், வாரந்தோறும் ஒவ்வொரு கிராமப் பகுதியாக சென்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஐ.டி. ஊழியர்கள் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மதுராந் தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்சலாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் 58 பேர் ஒருநாள் விவசாய பணியை மேற்கொண்டனர்.