தமிழகம்

பல்லாவரத்தில் வீடு புகுந்து துணிகரம்: 9 மணி நேரத்தில் திருடர்கள் பிடிபட்டனர்

செய்திப்பிரிவு

பல்லாவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகைகளை திருடிச் சென்ற 3 திருடர்களை போலீஸார் 9 மணி நேரத்தில் பிடித்தனர்.

பொழிச்சலூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன் (34). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலையில் லியோ ராஜராஜனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனர்.

மாலையில் வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ வில் இருந்த 55 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து பல்லாவரம் போலீஸில் இரவு 8 மணிக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி னார்கள். கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

காவல் ஆய்வாளர் சிவக்குமார் இரவோடு இரவாக பழைய குற்றவாளிகளைப் பிடித்து விசாரித் தார்.

விசாரணையில் ஆலந்தூரைச் சேர்ந்த நாகராஜ் (30), காஞ்சிபுரம் திருவிடந்தை ஆனந்தபாபு (30), கார்த்திக் ஆகியோர் அந்த வீட்டில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நேற்று காலை காலை 5 மணிக்கு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. 9 மணி நேரத்தில் திருடர்களை கைது செய்து நகைகளை மீட்ட போலீஸாரை இணை ஆணையர் திருஞானம் பாராட்டினார்.

SCROLL FOR NEXT